Rock Fort Times
Online News

தொட்டியத்தில் பரபரப்பு: கை கால்களை கட்டி மூதாட்டி கொடூர கொலை ! நகை பணத்துக்காக நடந்ததா?

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன் டிரைவர் . இவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிகிறது. இவரது மனைவி ராஜேஸ்வரி (65) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் .மகன் மணிகண்டன் நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறாா் .மகள் பிரியா திருமணம் முடிந்த நிலையில் திண்டுக்கல்லில் கணவருடன் வசித்து வருகிறார். இதனால் ராஜேஸ்வரி தொட்டியம் ஐயப்பன் நகரில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தாா். நேற்று அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதை பாா்த்து அக்கம் பக்கத்தினர் தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் போில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனா். அப்போது மூதாட்டி ராஜேஸ்வரி கை கால்கள் வாய் ஆகியவை துண்டால் கட்டப்பட்ட நிலையில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது. இதனையடுத்து முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் தடையவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துள்ளனர். போலீஸ் மோப்ப நாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இந்த கொலை பணம், நகைக்காக நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த கொலை சம்பவம் தொட்டியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்