Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி சார்பில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…

இந்திய விடுதலை போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினமான இன்று (30.01.2024) திருச்சி மாநகராட்சி சார்பில், மேயர் மு.அன்பழகன் தலைமையில் “மௌன அஞ்சலி ” அனுசரிப்பும் , அதனைத் தொடர்ந்து ” தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி”யும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை மேயர்ஜி.திவ்யா தனக்கோடி, துணை ஆணையர் டி. நாராயணன், மாமன்ற உறுப்பினர் ஜெ.கலைச்செல்வி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இதேபோல, திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் ந.காமினி, தலைமையில் “தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி” எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் காவல் துணை ஆணையர், நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் என 70 பேர் கலந்து கொண்டு, “இந்திய அரசியலமைப்பின்
பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன், குடிமகள் ஆகிய நாங்கள், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவோம் என்றும், தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க மாட்டோம் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறோம் என்றும், அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வோம் என்றும், இந்திய அரசியலமைப்பின் பால் முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறோம் என்று கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்