திருச்சி மாநகராட்சி மண்டலம் எண்-4, வார்டு எண் 62-க்கு உட்பட்ட ஸ்டாலின் நகர் குடியிருப்பு நல சங்கத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு புதைவடிகால், தார் சாலை மற்றும் தெருவிளக்கு அமைத்து தர வேண்டி மேயர் மு.அன்பழகனிடம் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு மேயர் மற்றும் மண்டலத் தலைவர், உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர் ஆகியோர் அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது , மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் கூறுகையில், பாதாள சாக்கடை பணிகள் முடிந்தவுடன் தார் சாலை அமைக்கப்படும் என்றும், தெரு விளக்குகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் 62 -வது வார்டு, குரு கார்டன் பகுதியில் விடுபட்ட தார் சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் 64-வது வார்டு பி .ஜி .நகர் பகுதியில் குடிநீர் குறைவாக வருவதாக கவுன்சிலர் கூறியதன்பேரில், குடிநீர் வழங்கும் நேரத்தை அதிகரிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார் . முன்னதாக, 64-வது வார்டு இச்சிக்கா மலைப்பட்டியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை மேயர் ஆய்வு செய்ததோடு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது மண்டலத் தலைவர் த.துர்கா தேவி, உதவி ஆணையர் சண்முகம், செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கவுன்சிலர் சுபா ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.