மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று( ஜூலை 9) மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது. மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு மேலணைக்கு வந்து கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்து இருந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி 18 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து இருந்தது. இந்த நிலையில் தற்போது அது அதிகரித்து முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 33,800 கன அடியாக உள்ளது. அந்த தண்ணீர் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 23 ஆயிரத்து 700 கன அடி நீரும், கொள்ளிடத்தில் 9200 கன அடி நீரும், கிளை வாய்க்கால்களில் 900 கன அடி நீரும் பிரித்து அனுப்பப்படுகிறது. இந்நிலையில் முக்கொம்பு மேலணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Comments are closed.