Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.கழக செயலாளர் டி.வி.கணேஷ் இல்லத்திருமண விழா…- பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு!

திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் டி.வி.கணேஷ்- நளினாதேவி தம்பதியரின் மகன் ஜி.லட்சுமண குமாருக்கும், திருச்சி உறையூர் எஸ்.இளங்கோவன், கே.அகிலா தம்பதியரின் மகள் எஸ்.இ.யுவாசினிக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருச்சி கண்டோன்மென்ட் அருகே உள்ள ஸ்ரீ வாசவி மஹாலில் இன்று (27- 08- 2025) புதன்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு தேமுதிகழக பொருளாளர் எல்.கே.சுதீஷ் முன்னிலை வகித்தார். அக்கட்சியின் மாநகர அவைத் தலைவர் எம்.சாகுல்ஹமீது வரவேற்று பேசினார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தியதோடு பரிசு பொருட்களும் வழங்கினார். திருமண விழாவில் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.வளர்மதி, வெல்லமண்டி நடராஜன், திருச்சி மாவட்ட பா.ஜ.க பொதுச்செயலாளர் ம.காளீஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ் மற்றும் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உற்றார்- உறவினர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் இவ்விழாவில் தேமுதிக துணைச் செயலாளர் எஸ்.செந்தில்குமார், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பாரதிதாசன், வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார், திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் மாதவன், மேற்கு மாவட்ட செயலாளர் சிவகுமார், கும்பகோணம் மாநகர் மாவட்ட செயலாளர் கோ.சங்கர், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநில, மாவட்ட, அணி நிர்வாகிகள், திருச்சி மாநகர் மாவட்ட துணை செயலாளர் பிரீத்தா விஜய்ஆனந்த், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்காயமண்டி கே.காளியப்பன், எஸ்.ஆர்.பெருமாள், அரியமங்கலம் பகுதி செயலாளர் ஏ. அலெக்சாண்டர், மாநகர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் எஸ்.பெரியக்கா, பாலக்கரை பகுதி செயலாளர் எம்.சங்கர் மற்றும் திருச்சி மாவட்ட, ஒன்றிய, மாநகர அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முடிவில் திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளர் கே.மில்டன்குமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார். திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமக்களின் பெற்றோர் டி.வி.கணேஷ்- நளினாதேவி, எஸ். இளங்கோவன்- கே.அகிலா மற்றும் எஸ்.தனராஜ்- டி.பானுமதி மற்றும் உறவினர்கள், நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்