Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவராக பஜார் மைதீன் நியமனம்…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக பஜார் ஏ.மைதீன் நியமிக்கப் பட்டுள்ளார். அவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் இம்ரான் பிரதாப் கார்த்தி அனுமதியுடன் சிறுபான்மை துறை மாநில தலைவர் முஹம்மது ஆரிப் நியமனம் செய்துள்ளார். அவரை தமிழக பொறுப்பாளர் நஜ்முல் ஹாமர் இஸ்லாம், மாநில பொது செயலாளர் வக்கீல் சரவணன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கின்ற லெனின் பிரசாத், மாநில துணைத் தலைவர் எம்.முஹம்மது முகைய்யதீன் ஆகியோர் பரிந்துரை செய்தனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பஜார் மைதீனை கட்சியின் மூத்த நிர்வாகிகள், நண்பர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்