திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்- முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்பு…!
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர் பாசறை, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாலக்கரை பகுதியில் பகுதி செயலாளர் ரோஜர் முன்னிலையிலும், காந்தி மார்க்கெட் பகுதியில் பகுதி செயலாளர் கலீல் ரகுமான் முன்னிலையிலும், காஜாபேட்டை பகுதியில் பகுதி செயலாளர் வாசுதேவன் முன்னிலையிலும் நடந்தது. மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை மண்டல செயலாளர் அறிவொளி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் அரவிந்தன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், ஐ.டி. பிரிவு செயலாளர் வெங்கட்பிரபு, வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், ஜெயராமன், கௌசல்யா,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சில்வர் சதீஷ்குமார், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் கருமண்டபம் சுரேந்தர், இன்ஜினியர் ரமேஷ், கலைப்பிரிவு பொருளாளர் சாதிக் அலி, மாணவரணி மார்க்கெட் பிரகாஷ், நிர்வாகிகள் இலியாஸ், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், வாழைக்காய் மண்டி சுரேஷ், அக்பர்அலி, கீழக்கரை முஸ்தபா, உறந்தை மணிமொழியன், எடத்தெரு பாபு, ஜெயக்குமார், ராஜ்மோகன், கயிலை கோபி, ரமணிலால், ரேஷன் கடை ராமலிங்கம், பொன்.அகிலாண்டம், கே.பி.ராமநாதன், ஐ.டி பிரிவு நாகராஜ், தில்லை விஸ்வா உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT…👇
Comments are closed.