திருச்சி தில்லை நகரில் உள்ள மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ரத்தினவேல் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாட்டில் திருச்சி மாநகர் மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், கழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். கட்சியில் புதிய உறுப்பினரை சேர்க்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும். வருகின்ற 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விரைவாக தொடங்கி திருச்சி மாநகரில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளில் பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு அமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்வது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பொற்கால ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைத்திட அனைவரும் பாடுபடுவோம் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட துணை செயலாளர்கள் பத்மநாதன், வனிதா, பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட அண்ணா தொழில் சங்க செயலாளர் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் எம். ஆர்.ஆர்.முஸ்தபா, அன்பழகன், ஏர்போர்ட் விஜி, சுரேஷ் குப்தா, கலைவாணன், நாகநாதர் பாண்டி, கவுன்சிலர் அம்பிகாபதி, இன்ஜினியர் இப்ராம்ஷா, ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், உடையான்பட்டி செல்வம், தலைமை கழக பேச்சாளர் ராமசந்திரன், ஆமூர் சுரேஷ்ராஜா, தில்லை விஷ்வா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.