திருச்சி, மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா மே மாதம் முழுவதும் விடுமுறையின்றி செயல்படும் என அறிவிப்பு…!
திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு அடுத்து பெரிய அளவில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடம் எதுவும் இல்லாததால் ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டது. திருச்சி வனக்கோட்டம், வன உயிரினம் பூங்கா சரகத்தின்கீழ், இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு குடும்பத்தினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் சென்று பார்வையிட்டு வருகின்றனர். பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா வாரத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் மூடப்பட்டு இருக்கும். ஆனால், தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவியர் மற்றும் குடும்பத்தினர் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு இப்பூங்கா,
மே மாதம் முழுவதும் விடுமுறையின்றி செயல்படும் என மாவட்ட வன அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.