திருச்சி, மேல சிந்தாமணி ஜெ.எஸ்.எஸ்.குரூப்ஸ் ஜெ.செந்தில்நாதன், ஜெ.சிவகுமார் தாயார் படத்திறப்பு நிகழ்ச்சி… * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு!
திருச்சி, மேல சிந்தாமணியை சேர்ந்த காலஞ்சென்ற ஜி. ஜெயராம் பிள்ளை மனைவியும், திருச்சி 12 -வது வார்டு திமுக வட்டச் செயலாளர் ஜெ.சிவக்குமார்,திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவரும், 12- வது வார்டு காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலருமான வழக்கறிஞர் ஜெ.செந்தில்நாதன் ஆகியோரின் தாயாருமாகிய ஜெ.ஞானாம்பிகை இம்மாதம் ஜூலை 04- 07 2025 அன்று காலமானார். இதனை முன்னிட்டு 19- 07- 2025 சனிக்கிழமை நள்ளிரவு கல் நிறுத்தி இன்று 20-ம் தேதி ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் ரோடு, தேசியாபிள்ளை தோப்பில் ஈமக்கிரியை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்மையாரின் பட திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், குடவாசல் திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.ஜோதிராமன், ராக்போர்ட் டைம்ஸ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர். லெஷ்மி நாராயணன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் பங்கேற்று அம்மையாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Comments are closed.