திருச்சி மனிதம் சமூகப் பணி மையம் மற்றும் டிரஸ்ட் சார்பில் 9-ம் ஆண்டு நீர் மோர் பந்தல் அமைப்பு- * அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சியில் உள்ள மனிதம் சமூகப் பணி மையம் மற்றும் டிரஸ்ட் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பொதுமக்கள் தாகம் தணிக்கும் வகையில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 9ம் ஆண்டாக நீர் மோர் பந்தல் துவக்க விழா உறையூர் அருணா தியேட்டர் அருகில் இன்று(06-04-2025) நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கி விழாவை சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திமுக மாவட்ட செயலாளர் வைரமணி, 23- வது வார்டு மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ், மனிதம் இயக்குனர் தினேஷ் குமார், செயலாளர் நல்லாசிரியர் பிரேம் குமார், பொருளாளர் டாக்டர்.பரமேஸ்வரி,மேலாளர் ஜாஹிர் உசேன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Comments are closed.