Rock Fort Times
Online News

திருச்சி- காரைக்கால், திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் சேவை பகுதியாக ரத்து…!

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் பல இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி- காரைக்கால் டெமு ரெயில் இன்று (பிப்.10), 11, 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். திருவாரூர் முதல் காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சி- பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 13, 15,17 ஆகிய தேதிகளில் ஊத்துக்குளி முதல் பாலக்காடு டவுன் வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து ஊத்துக்குளி வரை மட் டுமே இயக்கப்படும். இதேபோல, திருச்சி- ஈரோடு பாசஞ்சர் ரெயில் வருகிற 16, 19, 23, 26 ஆகிய தேதிகளில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூர் முதல் ஈரோடு வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்