Rock Fort Times
Online News

திருச்சி, கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோம விழா… * மே 11- ந் தேதி நடக்கிறது!

திருச்சி, கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் மே 11-ந் தேதி குரு பெயர்ச்சி பரிகார ஹோம விழா நடக்கிறது. சித்திரை 28-ந் தேதி ( 11-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை) வாக்கிய பஞ்சாங்கப்படி மதியம் 1.19 மணிக்கு குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. இதில் ரிஷபம், மிதுனம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம். குரு பெயர்ச்சி பரிகார ஹோம விழாவையொட்டி 11-ந்தேதி காலை 11 முதல் 12.30 மணி வரை கணபதி ஹோமம், குரு பரிகார ஹோமம், ஆஞ்சநேயர் காயத்ரி ஹோமம், பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. மதியம் 1.19 மணிக்கு மேல் நவக்கிரகங்கள் அபிஷேகம், ஆராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சுந்தரி, செயல் அலுவலர் சரண்யா, கோவில் அர்ச்சகர் வரதராஜன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்