திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி சமூக நலத்துறை இணைந்து மகளிர் தினம் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கும் விழாவை கல்லூரி அரங்கத்தில் நடத்தின. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ரொட்டேரியன் ஜமீர்பாட்ஷா, ரொட்டேரியன் சகிலாஜமீர், ரொட்டேரியன் சீனிவாசன், ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரதீபா மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வர் இசபெல்லா இராஜகுமாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் 35 பெண்களுக்கு “சாதனைப் பெண்கள் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபாபிரபு மற்றும் ஹோலிகிராஸ் கல்லூரியின் சமூக நலத்துறை தலைவி அனிதா மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.