Rock Fort Times
Online News

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த திருச்சி அரசு பள்ளி விழாவில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் வந்ததால் பரபரப்பு…! ( வீடியோ இணைப்பு)

தமிழகம் முழுவதும் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(22-02-2025) திறந்து வைத்தார். அந்தவகையில் திருச்சி மாநகர், ஈபி சாலையில் அமைந்துள்ள அரசு வைகவுண்டஸ் கோஷன் பெண்கள் முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் 6 வகுப்பறை கொண்ட புதிய கட்டிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது தமிழ்நாடு அரசின் சமூக வலைதளமான DIPR- ல் இந்த நிகழ்வு நேரலை காட்சியாக ஒளிபரப்பப்பட்டது. அந்த நேரலை காட்சியில் அதிமுக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படங்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்ததும் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தவறு எங்கு நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் மத்தியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்