திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு…! * அமைச்சர் அன்பில் மகேஷ், வணிகர் சங்க பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு பங்கேற்பு
திருச்சி மாநகராட்சி அனுமதி பெற்ற காந்தி மார்க்கெட் தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம், காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியாபாரிகள் சங்கம் இணைந்து 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா திருச்சி-தஞ்சை மெயின் சாலையில் அமைந்துள்ள தனரெத்தினம் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்க தலைவர் யூ.எஸ்.கருப்பையா தலைமை தாங்கினார். அனைத்து சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று கல்வி ஊக்கத்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் 60 மாணவ- மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இங்கு அமர்ந்திருக்கின்ற மாணவச் செல்வங்கள் எதிர்காலத்தில் ஒரு நல்ல தலைவராக, மருத்துவராக, இன்ஜினியராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்ற துறை தான் பள்ளிக்கல்வித்துறை. நாங்கள் அமைச்சராக இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் இன்றைக்கு வரும் நாளைக்கு போகும். ஆனால், நாங்கள் படித்த படிப்பு தான் இறுதிவரை எங்கள் கூடவே வரும். நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்களை மறந்து விடக்கூடாது. எனக்கு இந்தத் துறை பிடித்திருக்கிறது, நான் இந்த துறையில் சாதிப்பேன் என்று தேர்வு செய்து மாணவச் செல்வங்களாகிய நீங்கள் அந்தந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று கூறினார். விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜுலு, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மார்க்கெட் பகுதி கழகச் செயலாளர் பாபு, மாநகராட்சி மண்டலம் -2 தலைவர் ஜெயநிர்மலா, எம்கேஎம் காதர் மைதீன், ஏஎம்பி அப்துல் ஹக்கீம், பிகேஎஸ் அப்துல்மாலிக், கேடி தங்கராஜ், எஸ்என் சேகர் மற்றும் மார்க்கெட் சங்கங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed.