திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சிங்கப்பூர் செல்லவிருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது கைப்பையில் யூரோ, சிங்கப்பூர் டாலர் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் அந்தப் பணம் முழுவதையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளின் இந்திய மதிப்பு ரூ.27 லட்சம் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Comments are closed.