திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் விக்னேஷ்(வயது 22). இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணி விஷயமாக வீட்டில் இருந்து அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மன்னார்புரம் சந்திப்பு மதுரை ரோடு அருகில் வந்து கொண்டிருந்தபோது மூன்று பேர் இவரை தாக்கி செல்போனை பறித்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த வின்சென்ட் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனா். மேலும் அசோக் குமாா் என்பவரை தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.