Rock Fort Times
Online News

டெல்லியில் காத்திருப்பு போராட்டம் நடத்தும் திருச்சி விவசாயிகள்…

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரம் வழங்க கோரியும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதா மாதம் தண்ணீர் திறக்க கோரியும், மேகத்தாதுவில் அணை கட்டக்கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் டெல்லியில் காத்திருப்பு போராட்டத்தை இன்று முதல் தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஒரத்தநாடு தங்கமுத்து, மாநில து. தலைவர் சென்னை ஜோதிமுருகன், மாநில செயலாளர் நகர் ஜான் மெல்கியோராஜ், மாநில செயலாளர் பாடலூர் ராகு, மாநில செயலாளர் பாலு, மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார், மாநில து. தலைவர் அரியலூர் ஆண்டவர், மாநில மகிளிர் அணி செயலாளர்கள் உமாரணி, நாசம்மாள், திருச்சி மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் உமாகாந்த், ராஜாங்கம், ஆகியோர் முன்னிலையில் 100க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்