Rock Fort Times
Online News

திருச்சியில் 2 நாள் குடிநீர் கட்- 24 ஆம் தேதி தான் சப்ளை. ஆணையர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் பொது தரைமட்ட கிணற்றிலிருந்து 55 நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சார்க்கார் பளையம் அருகில் 40 எம்.எம் விட்டமுள்ள குழாயில் கசிவு ஏற்பட்டு சாலையில் வீணாக செல்கிறது. அதனை சரிசெய்ய 22 ம் தேதி் (நாளை )பணி நடக்கிறது. எனவே, மண்டலம்-2 விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, சுந்தராஜநகர் புதியது, சுந்தராஜபுரம் பழையது,காஜாமலை புதியது, மண்டலம்-3 அரியமங்கலம் கிராமம், அரியமங்கலம் உக்கடை, தெற்குஉக்கடை, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, மலையப்பநகர் புதியது, மலையப்ப நகர் பழையது, ரயில்நகர் புதியது, ரயில்நகர் பழையது. மகாலெட்சுமி நகர், முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது.முன்னாள் இராணுவத்தினர் காலனி பழையது,M.K.கோட்டை செக்ஸன் ஆபிஸ், M.K. கோட்டை நாகம்மை வீதி,M.K.கோட்டை நூலகம், பொன்னேரிபுரம்புதியது,பொன்னேரிபுரம்பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யாநகர், மண்டலம்-4 ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ்நகர், LIC புதியது, LIC சுப்பிரமணிய நகர், தென்றல்நகர் புதியது, தென்றல்நகர் பழையது, தென்றல்நகர் E.B காலனி வி.என். நகர் புதியது, வி.என். நகர் பழையது, சத்தியவாணி முத்து கே.கே நகர், சுப்பிரமணிய நகர் புதியது, சுப்பிரமணிய நகர் பழையது, ஆனந்த நகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதிநகர், எடமலைப்பட்டிபதூர் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டிபுதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகர் பழையது, அன்புநகர் புதியது,ரெங்காநகர் ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு 23 ம் தேதிஅன்று குடிநீர் விநியோகம் நடைபெறாது. மறுநாள் 24.ம் தேதிஅன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் குடிநீரைசிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்