Rock Fort Times
Online News

சாதிக்கும் பெண்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள்-ஆட்சியர் பிரதீப் குமார்.

திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் எஸ் ஐ டி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 7,500 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேசுகையில், இந்த செல்வமகள் திட்டம் மகளிர் தினத்தில் நடப்பது மிகவும் சிறப்பானது. பத்து லட்சத்திற்குமேல் பெண்கள் கொண்ட நகரத்தில் பாதுகாப்பான நகரமாக இந்திய அளவில் சென்னை முதல் நகரமாக விளங்குகிறது. பத்து லட்சத்திற்கு குறைவாக உள்ள மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இந்திய அளவில் ஐந்து இடத்தில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளதில் முதல் இடமாக திருச்சி உள்ளது. சாதிக்கும் பெண்கள் அமைதியாக தான் இருப்பார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் பல சாதனைகளை புரிந்துள்ளார்கள். பெண்கள் எல்லா துறையிலும் சாதித்து விட்டனர். மாணவ மாணவிகள் தங்களது இலக்கை அடைவதற்காக படிப்பதுடன் ஒழுக்கத்தையும் சேர்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியதோடு அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என்றார். மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா பேசுகையில், மாணவிகள் நன்றாக கல்வி கற்பது மூலம் அமைச்சர், டாக்டர், கலெக்டர், போலீஸ் கமிஷனர் என பல்வேறு தகுதிகளை அடைய முடியும் என்றார். மேலும் மாணவிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார். திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சுவாதிமதுர்மா பேசுகையில் செல்வமகள் திட்டத்தில் சேருவதற்கு குறைந்து ரூ 250 செலுத்த வேண்டும். தற்பொழுது 250 ரூபாய் கட்டி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. 250 முதல் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் வரை கட்டலாம். இந்த திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயது உள்ள குழந்தைகள் பயன்பெறும். 18 வயது ஆகும்போது பாதி தொகையை பெறலாம் 21ஆண்டு அல்லது திருமணத்தின் பொழுது அது முதிர்வு பெறும் என்றார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு கொறடா கோ.வி.செழியன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், டி.ஆர்.ஓ அபிராமி, திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சுவாதிமதுர்மா, திருச்சி மாநகர திமுக செயலாளரும் திருச்சி மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவருமான மதிவாணன், பகுதி செயலாளர் நீலமேகம், மாமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கார்த்தி உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, வரவேற்றார். மாநகராட்சி துணை மேயர் திவ்யா நன்றி கூறினார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்