Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ரூ.3 லட்சம் வெள்ள நிவாரண பொருட்கள்….

சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன...

சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் பொருட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் திருச்சி தில்லை நகரில் உள்ள மாநகர மாவட்ட அலுவலகத்தில் இருந்து முன்னாள் துணை மேயரும், மாநகர் மாவட்ட செயலாளருமான ஜெ. சீனிவாசன் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் ஐயப்பன், இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் ஏா்போா்ட் விஜி, முஸ்தபா , பூபதி , அன்பழகன், சுரேஷ் குப்தா ,கலைவாணன், இன்ஜினியர் இப்ராஹிம் ஷா, நிர்வாகிகள் எம்.ஆர்.ராஜேந்திரன்,அப்பாஸ், வெங்கட் பிரபு , ரஜினி, சுரேந்தர், ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெல்லமண்டி யு. பெருமாள், மல்லிகா செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனா்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்