Rock Fort Times
Online News

திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் சீமான்- * வழக்கு விசாரணை 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு…!

திருச்சி டிஐஜி யாக பதவி வகித்து வருபவர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திதா பாண்டே. இவரும் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தற்போது மத்திய அரசில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக, டிஐஜி வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு குற்றவியல் நீதிமன்றம் எண் நான்கில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக வருண்குமார் நீதிமன்றத்தில் 3 முறை நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்தார். சீமானும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்