Rock Fort Times
Online News

திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பிய கனடாவை சேர்ந்த கணவன்-மனைவி மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு…!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன் (எ) கமலதுரை ,  திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.  அதில்  ColinRoy (@RoyKuma90313394) என்ற நபர், தனது X Page-ல்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை
ஆபாசமாகவும். அவதூறு பரப்பும் வகையிலும் பதிவிட்டுள்ளார்.  இதுகுறித்து விசாரித்தபோது  நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செல்வகாந்தன் மற்றும் அவரது மனைவி சாந்தி பிரியா என்பது தெரியவந்தது.   திருமாவளவன் பட்டியல் இனத்தை சார்ந்தவர் என அறிந்தும் அவரை இழிவுபடுத்தியுள்ளனர். மேலும் வி.சி.க.
பெண் தொண்டர்கள் இருவர் திருமாவளவனுடன் இருப்பதுபோல விஷமத்தனமாக சித்தரித்து இழிவு படுத்தியுள்ளனர்.  இதுபோன்ற பதிவுகளை பதிவிடுவதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், மற்றவர்களுக்கும் பகைமையை ஏற்படுத்தி, கலவரத்தை தூண்டி, பொது அமைதியை கெடுக்கும் செயலை கனடாவில் இருந்து கொண்டு செல்வகாந்தன் மற்றும் அவரது மனைவி சாந்திபிரியா ஆகியோர் செய்து வருகின்றனர்.  எனவே, இதுபோன்ற  ஆபாச பதிவுகளை பதிவு செய்த கணவன்- மனைவி மற்றும் அவருக்கு உதவியாக இருக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டு இருந்தார்.  அந்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், Cr.No.39/24, u/s 296(b), 61, 196,352,353(2) BNS and section 67 IT Act and Section 4 of Tamil Nadu Prohibition of Harassment of  Women Act and 3(1)(t) & 3(1)(u) of SC/ST (POA) Act 1989- LA ஆகிய பிரிவுகளின் கீழ் செல்வகாந்தன்- சாந்திபிரியா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்