திருச்சி நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீர்மோர் வழங்கல்…!
தலைமை குற்றவியல் நீதிபதி தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பொதுமக்களின் தாகம் தணிக்க திருச்சி நீதிமன்ற வளாகத்தில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில், சங்கத்தின் செயலாளர் வழக்கறிஞர் பி.வி.வெங்கட் ஏற்பாட்டில் இந்த மாதம் முழுவதும் கோடைகால நீர் மோர் வழங்கும் நிகழ்வு இன்று(08-05-2024) தொடங்கியது. இதனை, தலைமை குற்றவியல் நீதிபதி என்.எஸ்.மீனா சந்திரா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நீதிமன்ற நடுவர்கள் சிவக்குமார், பாலாஜி, சுபாஷினி, மூத்த வழக்கறிஞர் மகேந்திரன், விக்ரமாதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.