திருச்சி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. இந்நிலையில் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒரு பிரிவினர் திடீரென இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் மாவட்டத் துணைத் தலைவர் சிக்கல் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் புத்தூர் சார்லஸ் மற்றும் மலைக்கோட்டை கோட்டத் தலைவர் ரவி, பொன்மலை கோட்ட தலைவர் செல்வகுமார், முன்னாள் கோட்டத் தலைவர்கள் கள்ளத்தெரு குமார், ஓவியர் கஸ்பர், பீமநகர் காசிம், சேவாதள மாநில செயலாளர் அப்துல் குத்தூஸ், இளைஞர் காங்கிரஸ் கவுஸ், ஹரிஹரன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கிரேசி, அமிர்தவல்லி, ஜெகதீஸ்வரி, கலைசெல்வி, அண்ணாசிலை விக்டர் , தேவதானம் செந்தமிழ் , செல்வன் , டெல்லி சரவணன், சிறுபான்மை பிரிவு தலைவர் சுபேர் ஆனந்த் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பிறகு திடீரென்று காங்கிரஸ் நிர்வாகிகள் அருணாச்சலம் மன்றத்தின் கதவை இழுத்து பூட்டினர். மேலும், அருணாச்சலம் மன்றத்தின் வெளிக்கேட்டை பூட்டி சாவியை எடுத்துச் சென்று விட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகா் மாவட்ட தலைவா் ஜவஹா் மாற்றம் மற்றும் தன்னிச்சையாக செயல்படும் திருநாவுக்கரசா் எம்பியால் கோஷ்டி பூசல் ஏற்பட்டதாக தொிகிறது. ஏற்கனவே திருநாவுக்கரசா் எம்பி மீது பொதுமக்கள் அதிருப்தியாக உள்ள நிலையில் தற்போது கட்சிக்கு உள்ளேயே அவருக்கு எதிா்ப்பு உள்ளதால் கட்சியினாிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.