Rock Fort Times
Online News

திருச்சியில் தொற்றுநோய் அதிகரிக்கிறது! விழிப்புடன் இருக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயால் பாதிப்போரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும், கவனத்துடனும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முக கவசங்கள், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருடன் நெருக்கமாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தனிமைப்படுத்தபட்டுள்ளனர் எனத் தெரிவித்தார். மேலும், திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது காய்ச்சல் நோயால் தினமும் 15 லிருந்து 20 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படும் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.கொரோனா தடுப்பு விதிகளின்படி, முக கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடித்து, பொதுமக்கள் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 918
Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்