Rock Fort Times
Online News

கிருஷி உடான் திட்டத்தில் திருச்சி,கோவை விமான நிலையங்கள் தேர்வு… மத்திய அரசு தகவல்…

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, வேளாண் பொருட்களை கையாளும் கிருஷி உடான் திட்டம் குறித்தும், தமிழ்நாட்டில் அந்த திட்டம் செயல்படுத்தப்படும் விமான நிலையங்கள் பற்றியும் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், சீக்கிரம் அழிந்து போகும் வேளாண் பொருட்களை நாட்டில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, குறிப்பாக வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான இடங்களில் இருந்து எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டதே கிருஷி உடான் திட்டம். இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் கோவை மற்றும் திருச்சி விமான நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் கோவை, திருச்சி உட்பட 16 விமான நிலையங்களில் குளிர் பதன வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்