Rock Fort Times
Online News

திருச்சியில் பிறந்தநாள் விழாவில் மோதல்: டீ மாஸ்டரை கத்தியால் குத்திய 2 பேர் கைது, 3 பேருக்கு வலை…!

திருச்சி, முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம்(வயது 24). சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சகோதரர் தனசேகரன் என்பவருடன் கீழ சிந்தாமணி ஓடத்துறை பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழா விருந்துக்கு சென்றார்.
அப்போது அங்கு வந்த மதன்குமார் ( 25 ) தரப்புக்கும், ஜீவானந்தம் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மதன்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் (23), சுப்பிரமணி (27), முகமது, ரகுநாதன் ஆகிய 5 பேரும் சேர்ந்து ஜீவானந்தத்தை கத்தியால் குத்தி, மரக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஜீவானந்தம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்கண்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து மதன்குமார், முகமது ஆகிய 2 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்