தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிடவும், கட்சியின் உட்கட்டமைப்பு வேலைகளை துரிதப்படுத்துவதற்காகவும், தமிழகம் முழுவதும் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அந்தவகையில் திருச்சி புறநகர் மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செம்மலையும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவிற்கு முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர அந்த லிஸ்டில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர்கள் சிலரின் பட்டியல் இதோ!
திருவள்ளூர் வடக்கு மாவட்டத்திற்கு சி.பொன்னையன், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தம்பிதுரை, மதுரை மாநகர் மாவட்டத்திற்கு பா.வளர்மதி, கரூர் மாவட்டத்திற்கு கரூர்.எம்.சின்னசாமி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு வி.கருப்பசாமி பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சேவூர் ராமச்சந்திரன், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வைகை செல்வன், பெரம்பலூர் மாவட்டத்திற்கு ப.மோகன், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு ஏ.கே.செல்வராஜ், நீலகிரி மாவட்டத்திற்கு செ.ம.வேலுசாமி, தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திற்கு எஸ்.வளர்மதி, தஞ்சாவூர் மேற்கு மாவட்டத்திற்கு என்.ஆர்.சிவபதி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு டி.கே.எம்.சின்னையா, வேலூர் மாநகர் மாவட்டத்திற்கு முக்கூர் என்.சுப்பிரமணியன், வேலூர் புறநகர் மாவட்டத்திற்கு செஞ்சி.ந.ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்டத்திற்கு ஜி.பாஸ்கரன், சிவகாசி தெற்கு மாவட்டத்திற்கு அன்வர்ராஜா, செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு சி.த.செல்லப்பாண்டியன், திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கு செ.தாமோதரன், வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்திற்கு கே.டி.பச்சைமால் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ செங்கோட்டையனின் பெயர் இடம்பெறவில்லை.
Comments are closed.