Rock Fort Times
Online News

திருச்சி நகர விற்பனை குழு தேர்தல்…- மே 30ம் தேதி நடைபெறுகிறது !

திருச்சி மாநகரின் பல பகுதிகளில் தரைக்கடை தள்ளுவண்டி ஆகியவற்றில் சிறு வணிகர்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கென சங்கம் அமைக்கப்பட்டு அச் சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திருச்சி மாநகராட்சி சார்பில் நகர விற்பனை குழு தேர்தல் நடத்துவதற்கான தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது., நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் நடைபாதை விற்பனை ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014 பிரிவு 38/1 மற்றும் உரிமம் வழங்குதல் திட்டம் 2015 விதியின் கீழ், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 6 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டு ஏப்ரல் 11ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில்,  இச்சங்க உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற மே மாதம் 30-ஆம்தேதி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறூம். அன்றைய தினமே வாக்குப்பதிவு முடிவுகள் வெளியிடப்படுகிறது.இத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் மே மாதம் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.மே 20ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். மே 21ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற விரும்புபவர்கள் பெற்றுக் கொள்ளலாம். மே 22ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, 30ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ளை தீர்ப்பின் அடிப்படையில் சாலையோர வியாபாரிகளில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் செய்து அனைத்து வார்டு குழு அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது ” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்