கொளுத்தும் வெயிலில் நின்று காவல் பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி மற்றும் பழச்சாறு… * திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் வழங்கினார்!
கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 100 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது. இருந்தாலும் போக்குவரத்து போலீசார், கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மோர் மற்றும் பழச்சாறு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாநகரில் பணிபுரியும் போக்குவரத்து காவல் துறையினருக்கு மோர், எலுமிச்சை சாறு மற்றும் வெயிலை தாங்கும் தொப்பிகளை மாநகர காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது மாநகர காவல் துணை ஆணையர்கள் ஈஸ்வரன், சிபின் மற்றும் காவல் உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்தத் திட்டத்தின் கீழ் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 244 போக்குவரத்து காவலர்களுக்கு மோர், எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட உள்ளது.
Comments are closed.