திருச்சி மத்திய மாவட்ட திமுக பிரமுகர் பெருவை எஸ்.முருகவேல் இல்ல புதுமனை புகுவிழா – * அமைச்சர் கே.என். நேருவிற்கு அழைப்பு
திருச்சி மத்திய மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளராக இருப்பவர் இன்ஜினியர் பெருவை எஸ்.முருகவேல். இவர் லால்குடி மற்றும் திருச்சியில் இ2ஜி இன்ஜினியரிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். வருகிற மார்ச் 9ம் தேதி லால்குடி அருகேயுள்ள மாந்துறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனது இல்ல புதுமனை புகுவிழாவிற்கான முதல் அழைப்பிதழை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு ஆகியோரை குடும்பத்துடன் சந்தித்து நேரில் வழங்கினார். சென்னை முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இன்ஜினியர் முருகவேல், அவரது மனைவி கோமதி, மகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.