திருச்சி நீதிமன்றம் அருகே மாவட்ட பாஜக அலுவலகத்தை காணொளி காட்சி மூலம் பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா இன்று திறந்து வைத்தார்.தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை உள்பட 10 மாவட்டங்களுக்கு பாஜக அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது .திருச்சி நீதிமன்றம் அருகே பிரம்மாண்ட பாஜக அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. அகில இந்திய பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா காணொளி காட்சி மூலம் அலுவலகத்தை திறந்து வைத்தார்.முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றிவைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் இல.கண்ணன், மாவட்ட பார்வையாளர் சிவ.சுப்ரமணியன்,பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் இல.கண்ணன்,திருச்சி புறநகர் மாவட்ட பார்வையாளர் லோகிதாசன்,புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், பாலாஜி சிவராஜ், திருமலை, தங்கராஜையன், பார்த்திபன், ராஜேஷ்குமார், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன், மாநில வர்த்தக பிரிவு செயலாளர் எம்.பி.முரளிதரன், மாவட்ட துணைத் தலைவா் லீமாசிவகுமார், நிர்வாகிகள் காளிஸ்வரன், ஒண்டிமுத்து,பொன்.தண்டபாணி சந்துரு,ஊடக பிரிவு மாவட்ட தலைவர் இந்திரன்,மல்லி செல்வராஜ்,மோகன், ஊடக பிரிவு மாவட்ட துணைத்தலைவர் வாசன்வேலி சிவகுமார், பால்ராஜ், விவேகானந்தன், மிலிட்டரி நடராஜன், சந்தோஷ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
