உலகம் முழுவதுமுள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு அளிக்கப்படும் சேவைகளின் தரம் குறித்து சர்வதேச விமான நிலைய கவுன்சிலிங்கான ஏசிஐ, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டுக்கான தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா, மலேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அடங்கியுள்ள பசுபிக் பகுதிகளில் திருச்சி விமான நிலையம் 4.94 புள்ளிகள் பெற்று சர்வதேச அளவில் 54வது இடமும் இந்திய அளவில் முதலிடமும் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, கோவா, கொல்கத்தா, இந்தூர், புனே ஆகிய விமான நிலையங்கள், அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. சென்னை விமான நிலையம் 4.90 புள்ளிகளுடன் இந்திய அளவில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.