திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மலேசியாவிலிருந்து நள்ளிரவு 12 மணிக்கு வரவேண்டிய ஏர் ஏசியா விமானம் நள்ளிரவு 2 மணி நேரம் தாமதமாக திருச்சிக்கு வந்தது. பின்னர் விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு புறப்பட தயாரான நிலையில் இயந்திர கோளாறு காரணமாக விமானத்திலிருந்து பயணிகள் மீண்டும் கீழே இறக்கி விடப்பட்டனர். இதனால் 220 பயணிகள் சிரமத்திற்க்கு உள்ளானாா்கள். எனவே அந்நிறுவனத்தின் பொறியாளர்கள் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதனையடுத்து மீண்டும் இன்று திருச்சியில் இருந்து பயணிகளுடன் மலேசியா நோக்கி செல்ல விமானம் தயாராகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த 220 பயணிகளில் 180 பேர் 12 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தில் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினா். சரியான தகவல்களை விமான நிலைய ஊழியர்கள் தெரிவிக்காத காரணத்தினால் விமான நிலைய பணியாளர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Prev Post