கட்சியின் கண்ணியத்தை மீறி செயல்பட்ட திருச்சி அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்…- இபிஎஸ் நடவடிக்கை!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள வாழவந்தான்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜா(38). ரவுடி பட்டியலில் உள்ளார். அதிமுக கலைப் பிரிவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர், பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி இளம்பெண் ஒருவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மற்றும் 15 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீஸார் அண்மையில் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜா மீது நில அபகரிப்பு தொடர்பாக மேலும் ஒரு வழக்கை போலீஸார் பதிவு செய்தனர். இந்நிலையில், கட்சியின் கோட்பாடுகள், கண்ணியத்தை மீறி செயல்பட்ட ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அவருடன் அதிமுகவினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed.