திருச்சி, என்ஜினியரிடம் ஆசைகாட்டி 6 லட்சத்து 64 ரூபாய் அபேஸ்! வாட்ஸ்அஃப் மோசடி கும்பலை தேடுது போலீஸ்
திருச்சி,ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 28). என்ஜினியரான இவர், தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசி தன் பெயர் அமிர்சிங் என்றும், கூகுள் ரிவியூ கொடுங்கள் பணம் உங்களுக்கு வந்து சேரும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அரவிந்த் கூகுள் ரிவியூ கொடுத்த போது ,அவருக்கு முதலில் ரூ. 210 பணம் வரவு வைக்கப்பட்டது. பிறகு அரவிந்துக்கு மற்றொரு முறை ரூபாய் 1410 பணம் வரவு வந்தது.இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் இன்ஜினியர் அரவிந்தை அப்பில் தொடர்புகொண்ட அதே நபர்,தன்னிடம் பணத்தை முதலீடு செய்யுங்கள் என்று கூறியுள்ளார். இதனை நம்பி அரவிந்த் ரூபாய் 6 லட்சத்து 64 ஆயிரம் பணத்தை முதலீடு செய்து உள்ளார்.பிறகு அந்த மர்ம ஆசாமியை தொடர்பு கொள்ள முடியவில்லை. பிறகு தான் பணம் கொடுத்து ஏமாந்தது தெரிய வந்தது.இது குறித்து அரவிந்த் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூபாய் 6 லட்சத்து 64 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.