Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் உட்பட 9 கோவில்களில் காணிக்கையாக பெறப்பட்ட 296 கிலோ தங்க நகைகள்… உருக்கி முதலீடு செய்ய ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைப்பு!

கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற தங்க நகைகள், கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய பொன் இனங்களை மும்பையில் உள்ள அரசுக்குச் சொந்தமான தங்க உருக்கு ஆலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் பிரசித்திபெற்ற திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவில், திருப்பூர் கரிய காளியம்மன் கோயில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், விழுப்புரம் ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமி மடம், திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோயில், ஈச்சனாரி விநாயகர் திருகோயில் என 9 திருக்கோயில்களில் காணிக்கையாக பெறப்பட்ட 296 கிலோ 600 கிராம் 100 மில்லி தங்க பொன் இனங்களை உருக்கி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சமயபுரத்தில் இன்று( மார்ச் 9) நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.

பின்னர் அவரது முன்னிலையில் மத்திய அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள தங்க உருக் காலைக்கு அனுப்பி வைக்க அந்த தங்க நகைகள் ஒப்படைக்கப்பட்டன. அப்போது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரவிசந்திரபாபு, திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் சூரியநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்