திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் மும்மத வழிபாட்டு ஸ்தலம்… * அமைச்சர் கே.என்.நேரு உறுதி!
திருச்சி, தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா முன்னிலை வகித்தார். திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஜமாத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் முகமது ரூஹில் ஹக் ஹஜ்ரத் ரஷாதி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில், பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் மூன்று மதத்தினரும் வழிபாடு நடத்துவதற்கான இந்து கோவில், கிறிஸ்தவ ஆலயம், பள்ளிவாசல் என மூன்றும் ஒரே இடத்தில் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சரிடம் இந்த கோரிக்கையை முன் வைத்து விரைவில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகர திமுகசெயலாளர் மற்றும் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், மாவட்ட முன்னாள் துணை செயலாளர் குடமுருட்டி சேகர், மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது, ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், பகுதி செயலாளர்கள் கவுன்சிலர் கமால் முஸ்தபா, நாகராஜன், மோகன்தாஸ், காஜாமலை விஜய், ராம்குமார், முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், வர்த்தக அணி தொழிலதிபர் ஜான்சன்குமார், மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத், வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ், வாமடம் சுரேஷ், பி.ஆர்.பி. பாலசுப்ரமணியன், தனசேகர், கவுன்சிலர்கள் மஞ்சுளா, பாலசுப்பிரமணியன், ராமதாஸ், புஷ்பராஜ் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம், மாவட்டத் தலைவர் ஸ்ரீதர், மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், மாநகர செயலாளர் ஏ.ஒன் ஹோட்டல் வி.பி ஆறுமுகப்பெருமாள்,மாநிலத் துணைத் தலைவர் கே.எம்.எஸ்.ஹக்கீம், மாநில இணைச்செயலாளர் திருப்பதி, செய்தி தொடர்பாளர் திருமாவளவன், ரஹீம், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் எல்.ரெக்ஸ், திருச்சி கலை, வக்கீல் கோவிந்தராஜன், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர்கள் கவுன்சிலர் பைஸ் அகமது, முகமது ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஹபிபுர் ரகுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் வெற்றிச்செல்வன், சிவா மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், இஸ்லாமிய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed.