ரயில்வே மருத்துவமனைகளை ஹெல்த் யூனிட்டாக மாற்றுவதை கைவிடக்கோரி திருச்சி பொன்மலையில் டி.ஆர்.இ.யூ. ஆர்ப்பாட்டம்…!
ரயில்வே மருத்துவமனைகளை ஹெல்த் யூனிட்டாக மாற்றுவதை கைவிடக்கோரியும், விழுப்புரம் சப்- டிவிஷனல் மருத்துவமனையை தரம் உயர்த்தி படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்தாமல் மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பதிலாக வேண்டுமென்றே
முடக்கி ஹெல்த் யூனிட்டாக ஆக மாற்றம் செய்து தொழிலாளர்களையும், ஓய்வு பெற்ற ஊழியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிர்வாகத்தின் செயல்பாட்டை கண்டித்தும், டி.ஆர்.இ.யூ சார்பில் திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனை அருகில் இன்று (04-03-2025) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பொன்மலை ஓபன் கிளைத் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி
டி.ஆர்.இ.யூ கோட்டத்தலைவர் சிவக்குமார், கோட்டச் செயலாளர் கரிகாலன், உதவி கோட்டத் தலைவர் பலராம், உதவி பொதுச் செயலாளர்கள்
சரவணன், ராஜா, ஓய்வு பெற்றோர் சங்க ஈஸ்வரதாஸ் ஆகியோர் பேசினர். இதில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Comments are closed.