மணப்பாறை அடுத்த கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2019-20 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் 4-பேர் தங்களது மாற்று சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறச் சென்ற போது அவர்களிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன் ஒவ்வொருவரும் பேப்பர் பண்டல் வாங்கி வருமாறு இல்லையென்றால் தலா ரூ.500 தர வேண்டும் என்று மிரட்டி கேட்டு தர குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை நிர்வாகம் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதரனை சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்தது மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் சுப்புலட்சுமி-யிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.