Rock Fort Times
Online News

பீகாரில் ரயில் தடம் புரண்டது : 4 பேர் பலி 60க்கும் மேற்பட்டோர் காயம்…( வீடியோ இணைப்பு )

டெல்லியின் ஆனந்த்பீகார் ரயில் நிலையத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி நோக்கி கிளம்பிய வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் பீகாரின் பக்ஸர் அருகே நேற்று ( 11.10.2023 ) இரவு வந்த போது திடீரென தடம் புரண்டது. இதில் 6 பெட்டிகள் கவிழ்ந்தன. இதனால், பயணிகள் அலறி அடித்து கொண்டு வெளியேறினர். சக பயணிகள் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து பயணிகளும், பொதுமக்களும் தங்கள் செல்போன் டார்ச் மூலம் மீட்பு பணிகளுக்கு உதவினர். விபத்து காரணமாக 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன் 21 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. ரயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே விபத்து தொடர்பாக 97714 49971, 89056 97493, 83061 80542, 77590 70004 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பீகார் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்