ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அணுல் அன்சாரி. இவர் கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். அணுல் அன்சாரியின் மகள் அப்சரா. 6 வயதான சிறுமி, தேயிலை தோட்டத்தில் தனது தாயுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கே பதுங்கி இருந்த சிறுத்தை, திடீரென சிறுமி அப்சராவை தாக்கி இழுத்துச்சென்றது. இதைக்கண்டு சிறுமியின் தாய் அதிர்ச்சியில் உறைந்து போனார். சிறுத்தை கடித்ததில் சிறுமி அப்சரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.