புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் லட்சுமி பிரியா இன்று (அக்.4) வீட்டில் அயன்பாக்ஸ் மூலம் துணி தேய்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது உடலில் மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லட்சுமி பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். துணி தேய்த்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பெண் எஸ்.ஐ. உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.