Rock Fort Times
Online News

தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த இடத்தில் துயரம்: கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் 4 பேர் பலி!

தஞ்சாவூர் அருகே குருங்களூர் பகுதியில், தஞ்சாவூர்- விக்கிரவாண்டி சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சுற்றுலா வந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் குமார், அவரது மனைவி ஜெயா, நீலவேணி, துர்கா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குமாரின் மகள் மோனிஷா, மகன் ஸ்டாலின் மற்றும் சரக்கு வாகனம் டிரைவர் விக்னேஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்