திருச்சி சஞ்சீவிநகர்-தேவதானம் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல்- * கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தல்!
திருச்சி டவுன் ஸ்டேஷன் ரோடு பகுதியில் சஞ்சீவி நகர் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. சஞ்சீவி நகர் மற்றும் தேவதானம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் அங்குள்ள பள்ளி கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர். சஞ்சீவி நகர்- தேவதானம் இடையே ரயில்வே கேட் அமைந்துள்ளது. இது, மிகவும் குறுகலான பாதையாகும். ரயில் வரும்போது இந்த கேட் மூடப்படுகிறது. இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ரயில் சென்றபிறகு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இந்த ரயில்வே கேட் வழியாக தனியார் பள்ளிகளின் பெரிய வேன்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதால் பின்னால் வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் குறித்த நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. பள்ளி நிர்வாகத்தினர் திட்டுகின்றனர். தற்போது தேர்வுகள் நடைபெற்று வருவதால் குறித்த நேரத்துக்குள் தேர்வுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும் போதும் இதே நிலைதான் இருக்கிறது. ஆகவே, இந்த இடத்தில் போக்குவரத்து காவலர் ஒருவரை பணியமர்த்தி தனியார் பள்ளிகளின் பெரிய வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களை அனுமதிக்காமல் ஆட்டோ, கார், இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களை மட்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Comments are closed.