திருச்சி ரயில் நிலைய பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், சில ரயில்கள் பகுதி நேரமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடையாத காரணத்தினால் திருச்சி கோட்டத்திற்கு உட்பட 12 முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை இன்று ( 01.08.2023 ) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி– ராமேஸ்வரம், திருச்சி – ஈரோடு, திருச்சி – தஞ்சை, தஞ்சை – மயிலாடுதுறை, மயிலாடுதுறை – விழுப்புரம், திருச்சி – கரூர், திருச்சி – காரைக்கால், அரக்கோணம் – வேலூர் ஆகிய பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் ரயில் தண்டவாளத்தை இணைக்கும் இண்டர் லாக்கிங் பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.