திருச்சியில் நாளை(அக்.30) “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனை கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை…!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கழக தலைவர், தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பணிகள் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (அக்.30) மாலை 4 மணியளவில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் எனது தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர, மண்டல பொறுப்பாளர், அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார். இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர், தொகுதி பார்வையாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநகர, நகர, பேரூர், வட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட, மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.