Rock Fort Times
Online News

திருச்சி கே.கே.நகர் உழவர் சந்தையில் தக்காளி ரூ.80- க்கு விற்பனை…

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. விளைச்சல் குறைவு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைவால் தக்காளியின் விலை இன்னும் குறையவில்லை. இதனால், இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் நடத்துபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகள் மற்றும் உழவர் சந்தைகளில் தக்காளி மற்றும் காய்கறிகளை குறைந்த விலைக்கு விற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,
தமிழகம் முழுவதிலும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேளாண் துறை அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.
இ-சந்தை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடமிருந்து தக்காளி நேரடி கொள்முதல் செய்யப்பட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தோட்டக்கலை விற்பனை நிலையம் மூலமாக வெளி சந்தைகளை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி கே.கே நகர் உழவர் சந்தையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தக்காளி கிலோ 80 ரூபாய்க்கு
விற்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் கலந்து கொண்டு விற்பனையை தொடங்கி வைத்தார். விற்பனை தொடங்கி  30 நிமிடத்திற்குள் அனைத்து தக்காளியும் விற்று தீர்ந்தது குறிப்பிடதக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்